போலி ஆதார்! ரூம் புக்கிங்! 15 ஆயிரம் மதிப்புள்ள டிவி அபேஸ்! திருட்டு இளைஞருக்கு வலைவீச்சு!
- போலி ஆதார் கார்டு மூலம் ரூம் புக் செய்து ரூமில் இருந்த 22 இன்ச் டிவியை திருடி சென்ற வாலிபர்.
- போலி ஆதார் கார்டு மட்டுமே இருப்பதால் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் இளைஞரை தேடி வருகின்றனர்.
விழுப்புரத்தில் முக்கிய பகுதியில் இயங்கி வரும் கே.வி.ஆர் லாட்ஜில் ஒரு இளைஞர் ரூம் எடுத்து தங்கியுள்ளார். அவரின் ஆதார் கார்டை வாங்கி லாட்ஜ் ஊழியர்கள் ரூம் புக் செய்துள்ளனர்.
அவரும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று உடனே சிறுது நேரத்தில் தான் கொண்டு வந்த பெட்டியுடன் சென்றுவிட்டார். வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் ஹோட்டல் உரிமையாளர்கள் இன்னொரு சாவி கொண்டு ரூமை திறந்து பார்த்தனர்.
அந்த ரூமில் 15 ஆயிரம் மதிப்புள்ள 22 இன்ச் எல்.இ.டி டிவியை அந்த இளைஞர் திருடி சென்றது தெரியவந்தது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அந்த இளைஞரின் ஆதார் கார்டை ஆராய்ந்த போது அது போலி என தெரிந்தது. அதன் பின்னர் சிசிடிவி காட்சிகள் கொன்டு அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.