சென்னை ஐஐடியின் ஒரு பாதை மூடல்.. மாணவர்கள் அதிர்ச்சி..!
- சென்னை, கிண்டியில் உள்ள ஐஐடி பொறியியல் வளாகத்தின் வேளச்சேரி மார்க்கத்தில் உள்ள கதவு மூடப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளதாக ஐஐடி நிறுவனம் தகவல்.
சென்னை, கிண்டியில் ஐஐடி பொறியியல் கழகம் உள்ளது. இதில், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த ஐஐடிக்கு கிண்டி பகுதியில் பிரதான நுழைவு வாயில் உள்ளது. இதை தவிர்த்து வேளச்சேரி மற்றும் தரமணி பகுதிகளில் தனித்தனி நுழைவு வாயில்கள் உள்ளது.
இந்த நுழைவுவாயில்களில், பாதுகாப்பு காரணமாக வேளச்சேரி பகுதியில் உள்ள ஐஐடி நுழைவுவாயிலின் கதவு மூடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகம் நோட்டீஸ் ஓட்டியுள்ளது.