மதுரையில் ருசிகரம்! காவலர் தேர்வு எழுத வந்த திருடன்! சுற்றிவளைத்து பிடித்த போலீசார்!

Default Image

மதுரை மாவட்டம் கிருஷ்ணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் அதிகம் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்காமல் இருந்த செயின் பறிப்பு திருடனை, போலீஸார் மிக எளிதாக சுற்றிவளைத்து பிடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விஜயகாந்த் என்பவர் பல செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு போலிஸில் சிக்காமல் வந்துள்ளார். அந்த திருடனை போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.  இந்த திருடன் அண்மையில் நடைபெற்ற காவலர் பணி தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளான்.

அந்த தேர்வினை எழுத ஒரு தனியார் பாலிடெக்னிக் காலேஜ் வந்துள்ளான் அந்த திருடன். இதனை தெரிந்துகொண்ட காவல்துறையினர், அந்த திருடன் தேர்வு எழுதும் வரை காத்திருந்து பின்னர், சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல காத்திருந்து கச்சிதமாக போலீசார் இந்த திருடனை பிடித்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்