ஒருதலைக்காதல் – பிளஸ் 2 மாணவிக்கு கத்திக்குத்து..!
தூத்துக்குடி அருகே செக்காரக்குடியை சேர்ந்த +2 மாணவிக்கு ஒருதலை காதலால் கத்திக்குத்து.
தூத்துக்குடி அருகே செக்காரக்குடியை சேர்ந்த +2 மாணவி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த சோலையப்பன் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை மாணவி ஏற்க மறுத்துள்ளார்.
மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த அவர், தேர்வெழுதிவிட்டு வந்த மாணவியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால், தலையில் காயமடைந்த மாணவிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியை அரிவாளால் தாக்கிய சோலையப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.