ஓடும் பேருந்தில் தாலிகட்டிய இளைஞன்.! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!ஒரு தலைக்காதல் விபரீதம்..!

- ஓடும் பேருந்தில் பெண்ணிற்கு தாலிகட்டிய இளைஞன்
- தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள் என்று ஒரு தலைக்காதல் விபரீதம் அரங்கேறி உள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்.அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை ஒரு தலையாக கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார்.
ஆனால் அந்த பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இதனை அறிந்த ஜெகன் தனது காதலை அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.இதனை அந்தப் பெண் ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில் அப்பெண் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அவரை பின் தொடர்ந்த அந்த வாலிபர் திடீரென ஓடும் பேருந்தில் வைத்து அப்பெண்ணிற்கு தாலிக் கட்டியுள்ளார்.இந்நிகழ்வை சற்றும் எதிர்பாராத அப்பெண் கத்தி கூச்சலிடவே பேருந்தில் இருந்த மற்ற சக பயணிகள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து வாணியம்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் வாணியம்பாடி போலீசில் புகார் அளித்துள்ளார்.இதனால் போலீசார் ஜெகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025