2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 15 உறுதிமொழிகள் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியீடு.
திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்திருந்தது. சமீபத்தில் அக்கட்சிக்கு பானை சின்னமும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் விழுப்புரத்தில் கட்சியின் தேர்தலை அறிக்கையை வெளியிட்டார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 15 உறுதிமொழிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் உள்நோக்கத்தோடு பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை மேற்கொள்ளும் தனியார்மயமாக்குதல் போன்ற சதி முயற்சிகளை முறியடித்து சமூகநீதியை பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.
ஒரே தேசம் – ஒரே கல்வி என்ற அடிப்படையில் தேசிய கல்வி கொள்கையை வரையறுத்து, அதன்மூலம் ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே கலாச்சாரம் என்பதை நடைமுறைப்படுத்த நடக்கும் முயற்சியை முறியடிப்போம். திமுக ஆட்சிக்கு வந்ததும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…