புதுக்கோட்டை அருகே பட்டாசு குடோனில் ​வெடி விபத்து! ஒருவர் பலி…ஒருவர் காயம்!!

fireaccident

சென்னை : பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வெடி விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதில் உயிரிழந்தவர் கார்த்திக் என்ற இளைஞர்  என்பது தெரியவந்துள்ளது.

அதைப்போல, வெடிவிபத்தில் காயமடைந்தவர் பட்டாசு ஆலை உரிமையாளர் வேல்முருகன் எனவும் தெரியவந்துள்ளது. காயமடைந்த  வேல்முருகன் தற்போது மணப்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக,  பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் வெல்டிங் வைக்கும்போது தீப்பொறி விழுந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதில் விபத்து ஏற்பட்டுகார்த்திக்  உடல் கருகி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சமீபகாலமாக பட்டாசு குடோன்களில் இப்படியான விபத்து நடந்து வருவது அதிகமாகி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு, முன்பு கூட கெங்கவல்லி அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து இன்று அத்திப்பள்ளத்தில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA