திருவாரூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
திருவாரூர் : மன்னார்குடி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் சதீஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சைக்குமன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.