லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
பல்லடம் அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, கரணம்பேட்டை பகுதியில் உள்ள திருப்பூர்-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்ததாக தெரிகிறது. ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி முருகன் – கல்யாணி என்ற தம்பதியினர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட கவிதா மற்றும் ஓட்டுநர் கவியரசன், விஜய் ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ், பல்லடம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரி மீது அதிவேகமாக மோதியது. ஆம்புலன்ஸ் அதிவேகத்தில் சென்றதாகவும், ஓட்டுநரால் லாரியைத் தவிர்க்க முடியவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.