புதுசா ஸ்மார்ட் போன் வாங்குங்க! ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக எடுத்துக்கொள்ளுங்கள்!

Default Image
  • வெங்காயத்தின் விளைச்சல் பாதிப்பால் அதன் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. 
  • இதனை மையப்படுத்தி ஒரு போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என போர்டு வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

வெங்காயத்தின் விளைச்சல் பரப்பளவு ககுறைவு உள்ளிட்ட சில காரணங்களால் இங்கு இந்தியாவில் வெங்காய உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால், வெங்காயத்தின் விலை தற்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் வெங்காயத்தின் விலை ஏற்றத்தை நெட்டிசன்கள் நூதனமாக பல்வேறு வீடியோக்கள், மீம்ஸ்  போட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு செல்போன் கடைக்காரர் புதிய வகை விளம்பரம் ஒன்றை தனது கடையில் வைத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில்  ஒரு செல்போன் கடைக்காரர் தன் கடையில் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என சின்னதாக பேனர் அடித்து கடை முன்னே அந்த பதாகையை வைத்துள்ளார். வாடிக்கையாளர்களை கவர தற்போது பிரபலமாக உள்ள புதிய யுக்தியை கையாண்டுள்ளார். தற்போது அந்த கடை மிகவும் பிரபலமாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்