மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிபோக நானும் ஒரு காரணம்-எம்எல்ஏ கருணாஸ்
முதலமைச்சர் பழனிசாமியிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து ஆளுநர் மாளிகை மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது
இந்த நிலையில் இது குறித்து எம்எல்ஏ கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிபோக நானும் ஒரு காரணம்.மணிகண்டன் பற்றி முதன்முதலில் முதல்வரிடம் புகார் கொடுத்தது நான்தான்.ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்று எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.