“இவரது மறைவு நாட்டுக்கும் கலைக்கும் பேரிழப்பாகும்” – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை:புகழ்பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவரான பண்டிட் பிர்ஜூ அவரது மறைவு நாட்டுக்கும் கலைக்கும் பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவரான(கதக் மேஸ்ட்ரோ) பண்டிட் பிர்ஜூ மகராஜ் உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.அவருக்கு வயது 83. இதனையடுத்து,அவரது மறைவுக்கு பிரதமர் மோடி,நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,பண்டிட் பிர்ஜூ அவர்களின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
“பழம்பெரும் கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.அவர் கலையின் சிறந்த தூதராக இருந்தார் மற்றும் அவர் ஒரு வளமான பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்.
அவரது மறைவு நாட்டுக்கும் கலைக்கும் பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.
Deeply saddened by the demise of legendary Kathak dancer Pandit Birju Maharaj.
He was a great ambassador of the art and has left behind him a rich legacy. His passing away is a great loss for the nation and the art. I extend my deep condolences to his bereaved family and fans. pic.twitter.com/4NDZzh7UAb
— M.K.Stalin (@mkstalin) January 17, 2022
பண்டிட் பிர்ஜூ அவர்கள் பத்ம விபூஷன் விருது மற்றும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற “உனைக் காணாது நான்” என்ற பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார்.அவர் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையை நடைமுறைப்படுத்தி ஒரு பாடகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.