காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 வருடங்களுக்கு பின் தோன்றி இருப்பதால் அத்திவரதரை தரிசனம் செய்ய நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அரசு மற்றும் கோவில் அதிகாரிகள் எதிர்ப்பார்த்ததை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.இந்த கூட்ட நெரிசலால் பல உயிரிழப்பு ஏற்படுகிறது.இந்நிலையில் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் கூட்ட நெரிசலில் உயிர் இழந்தனர்.
உயிர் இழந்த பக்தர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு லட்சம் என அறிவித்தார்.இந்நிலையில் சென்னையை சார்ந்த விருகம்பாக்கம் பகுதியை சார்ந்த ஆறுமுகம் என்ற முதியவர் கூட்ட நெரிசலில் மூச்சு திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.
இதுவரை அத்திவரதர் தரிசனம் செய்ய வந்து உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று இறந்தவர்கள் இல்லாமல் இதற்கு முன் 2 பேர் இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…