One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல்… அதிபர் மோடி..! பலிகடா அதிமுக.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!
சென்னையில் இன்று ஒரு திருமண நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பிரதமர் மோடி, நாட்டின் புதிய அதிபராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏதேனும் சில மாநிலங்களில் பெரும்பான்மை இல்லை என்றால் அங்கு அடுத்த தேர்தல் வரும் வரை ஜனாதிபதி தேர்தலை அமல்படுத்துவார்கள். இப்படியே தொடர்ந்து , பிரதமர் என்பதை தாண்டி நாட்டின் அதிபராக இருக்க பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். தேர்தல் செலவை மிச்சப்படுத்வத்தை விடுத்து, முதலில் நீங்கள் (பாஜக) கொள்ளை அடிப்பதை நிறுத்துங்கள் என மத்திய அரசை கடுமையாக சாடினார்.
அடுத்து, அதிமுக ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரிப்பது குறித்து பேசுகையில், ஆளும் கட்சியாக இருக்கும் போது இந்த திட்டத்தை எதிர்த்த அதிமுக தற்போது ஆதரிக்கிறது. இது எப்படி என்றால் ஆடு தானாக கோடாரி எடுத்து கொடுப்பது போல , அதிமுக பலிகடா ஆக போகிறது. இது திமுகவை மட்டுமல்ல திமுகவையும் பாதிக்கும். எந்த அரசியல் கட்சியும் அரசியல் நடத்த முடியாது. என பேசினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.