15 ஆயிரம் கடன் விவகாரம்.! கன்னியாகுமரியில் நண்பனை ஓட ஓட விரட்டி கொலை செய்த நண்பர்கள்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி கேட்டதற்காக தனது நண்பரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் டெம்போ ஓட்டுனராக பணியாற்றுபவர் பெலிக்ஸ், இவர் உடன் பழகிய கண்ணன் என்பவருக்கு 15 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். கடனை அவ்வப்போது திருப்பி கேட்டுள்ளார பெலிக்ஸ். ஆனால், கடன் திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார் கண்ணன்.
படுகொலை : சம்பவத்தன்று 15 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிக் கொடுப்பதாக தனது வீட்டிற்கு பெலிக்சை அழைத்துள்ளார் கண்ணன். இதனை நம்பி பெலிக்ஸ் கண்ணன் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், கண்ணன் அங்கு தனது நண்பர்கள் மூன்று பேருடன் இணைந்து பெலிக்ஸை அறிவாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளார். அங்கிருந்து தப்பி வெளியே ஓடிவந்துள்ளார் பெலிக்ஸ். ஆனால், விடாமல் துரத்தி அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளனர் கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள்.
தலைமறைவு : இந்த சம்பவத்தை அடுத்து கண்ணன் உள்ளிட்ட மூன்று பேரை கன்னியாகுமரி போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக இருக்கும் நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.