#BREAKING: பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு…!
பேரறிவாளனுக்கு 7-வது முறையாக மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதை தொடர்ந்து 1 மாதம் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று கடந்த மே 28-ம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் தமிழக அரசு வழங்கியது. இதைத்தொடர்ந்து பேரறிவாளனுக்குத் தமிழக அரசு பரோலை நீட்டித்து வருகிறது. வரும் 25-ம் தேதியுடன் பேரறிவாளன் பரோல் முடிவடைடைய இருந்த நிலையில், உடல்நிலை சிகிக்சை காரணமாக மீண்டும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், 7 வது முறையாக பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.