ஒரு மாத சம்பளமும், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சமும் வழங்கப்படும் – எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு பொதுநிதி திரட்டி வருகிறது. அந்த வகையில் அரசுக்கு உதவும் பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா கலைஞர்கள் என நிதியளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மஜக பொதுச்செயலாளர் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். பின்னர் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் தனது ஒரு மாத சம்பளமும், அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சமும் ஒதுக்கீடு செய்து அரசுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.