தமிழக அரசுக்கு ஒரு லட்சம் அபராதம் – உச்சநீதிமன்றம்

Default Image

ஒரு லட்சம் அபராதத்தை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு 4 வாரத்தில் தமிழக அரசு செலுத்த உத்தரவு.

ஓய்வூதிய பலன்கள் தொடர்பான வழக்கில் தமிழக பள்ளி கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம். துப்புரவுதொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காமல் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முயற்சி செய்வதாக கூறி தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்.

ஒரு லட்சம் அபராதத்தை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு 4 வாரத்தில் தமிழக அரசு செலுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு இதே போல ஒரு வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்