சென்னை திருவல்லிக்கேணியில் மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி.!
சென்னை திருவல்லிக்கேணியில் பலத்த காற்று வீசிய போது மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலியாகியுள்ளார்.
நிவர் புயல் காரணமாக சென்னை உட்பட பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.மேலும் நிவர் புயலால் மின்கலங்கள் முறிந்து விழுந்தும் , மரங்கள் முறிந்தும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து 50 வயது மதிக்கத்தக்க நபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பலத்த சூறைக்காற்று காரணமாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டாக்டர் பெசன்ட் சாலையில் மரம் முறிந்து விழுந்ததாகவும் ,அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் மீது மரம் விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.உயிரழந்தவர் யார் என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து சாலைகளில் அருந்து கிடக்கும் மின்கம்பங்களை தொட வேண்டாம் என்றும் , வாகனங்களை மரங்களின் கீழ் நிறுத்த வேண்டாம் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.