நியாயவிலை கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் விடுமுறை நாட்களில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்த கூட்டுறவுத்துறை உத்தரவு.
கூட்டுறவு சங்க பதிவாளர் அனைத்து மண்டல இணைப்பதிவாளருக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் நியாயவிலைக்கடை விடுமுறை தினங்களில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்த உத்தேசிக்கப்பட்டு, அந்தந்த மண்டலங்களுக்கு அருகிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களில் நடத்தவும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மேலாண்மை இயக்குநரைக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அப்பயிற்சியில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரின் செயல்திட்டப்படி பயிற்சியாளர்களின் பட்டியலை தயாரித்து தங்கள் மண்டலத்தில் பணிபுரியும் அனைத்து நியாயவிலைக்கடைப் பணியாளர்களும் எவ்வித விடுதலுமின்றி கலந்து கொள்ளும் வண்ணம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், பயிற்சியில் கலந்து கொள்ளும் பணியாளர்களுக்கு பயணப்படியை அவர்கள் பணியாற்றும் கூட்டுறவு சங்க நிதியிலிருந்து வழங்க சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…