தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (3.6.2023) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தமிழ்நாடு அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மவுன அஞ்சலி இன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த சோகமான சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தி, இறந்தோருக்கு மவுன அஞ்சலி செலுத்துமாறு கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (3.6.2023) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார். pic.twitter.com/sHcmhuMHSd
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 3, 2023
ஒடிசா ரயில் விபத்து:
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவின் பாஹனகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.20 மணி அளவில் விபத்துக்குள்ளானது இந்த கோர விபத்தில் 233 பேர் உயிரிழந்ததாகவும், 900-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள