ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இன்று முதல் அமல் ! தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
மக்கள் தங்களது பகுதியில் செயல்படும் நியாய விலைக்கடைகளில் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டம் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு மூலம் எந்த நியாய விலை கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
எனவே தமிழக அரசும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.இதன் விளைவாக சோதனை அடிப்படையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலம் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கைரேகையை பதிவு செய்து அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம்.
இந்நிலையில் தான் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.இதன் மூலம் இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.32 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதைத் தவிர்த்து மதுரை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, தஞ்சாவூர்,ராமநாதபுரம்,விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் வருகின்ற 15-ஆம் தேதி முதல் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025