ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளது – அமைச்சர் காமராஜ்

Default Image

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால், அதற்கான வேலைகளை அரசியல் கட்சிகள் கையாண்டு வருகின்றனர். இதனால் விமசனங்கள் அதிகமாக வந்துகொண்டு இருக்கிறது. அந்தவகையில், 6 மாதத்தில் விடியல் பிறக்கும் என முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் காமராஜ், ஆறு மாதத்தில் விடியல் பிறக்கும் என ஸ்டாலின் கூறியது எல்லாம் பகல் கனவு தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு தீமை விளைவிக்கும் எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று கூறிய அவர், வேளாண் மசோதா தாக்கல் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்  முதற்கட்ட சோதனை சில மாவட்டங்களில் சோதித்து பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi