ரூ.2.50 கோடி நகை கொள்ளையில் ஒருவர் கைது..!
கடந்த புதன்கிழமை சென்னை தியாகராய நகரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ராஜேந்திர பாபு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதில், க்ரில் கேட் பூட்டை உடைத்து 4 கிலோ தங்கம், வெள்ளிக் கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக உரிமையாளர்கள் 3 பேர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியது.
மேலும், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொள்ளை போன சம்பவத்தில் சுரேஷ் என்பவரை கைது செய்துள்ள போலீசார் மற்றோரு கொள்ளையன் கார்த்திக் என்பவரை வலைவீசி தேடி வருகிறது.