கடலை பருப்பு சாப்பிட்டு உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை – திண்டுக்கல்லில் நடந்த சோகம்!
கடலை பருப்பு சாப்பிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என்னென்ன சாப்பிட கொடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். சில கடினமான பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்காமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே உள்ளது செங்குளத்துபட்டியை சேர்ந்த விஜய் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை தர்ஷனா கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வீட்டிலிருந்த கடலைப் பருப்பை எடுத்து சாப்பிட்டுள்ளார். அளவுக்கு அதிகமாக இதை சாப்பிட்டுள்ளார், குழந்தைக்கு பல் அதிகம் இல்லாததால் மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்கி உள்ளார். தொண்டையில் சிக்கிய கடலைப்பருப்பால் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு குழந்தை மயங்கி விழுந்துள்ளார்.
குழந்தை மயங்கியதை பார்த்ததும் அக்குழந்தையின் பெற்றோர் பதறியடித்து குழந்தையை தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தர்ஷனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை அடம்பிடிக்கிறார்கள் அல்லது விரும்புகிறார்கள் என்பதற்காக உண்ண தகாத பொருள்களை கொடுக்கவேண்டாம்.