மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள் – முதல்வர்!
மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள் என முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று கேரளா முழுவதும் அம்மாநில மக்களின் வாழ்வோடு இணைந்து இருக்கக்கூடிய ஓணம் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடக்கூடிய மலையாள மக்களுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போதும் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அன்பிற்கும் ஈகை பண்பிற்கும் மிக சிறந்த அடையாளம் ஓணம் திருநாள், மக்களின் அன்பைப் பெற்ற மாவலி மன்னரை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்கும் மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளம் ஓணம் திருநாள்!
மக்களின் அன்பைப் பெற்ற மாவலி மன்னரை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்கும் மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள்!#ഓണംആശംസകൾ pic.twitter.com/RpJZqG8Ded
— M.K.Stalin (@mkstalin) August 21, 2021