ஓணம் பண்டிகை – நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!
நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அருணா ஆக.29 ஆம் தேதி அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இதற்கு பதிலாக செப்டம்பர் 2-ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.