தமிழ் வாழ்க., தியாகிகளுக்கு வீர வணக்கம்! தவெக தலைவர் விஜய் பதிவு!

மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் 'தமிழ் வாழ்க' எனும் பதிவை இட்டுள்ளார்.

TVK Leader Vijay praise Mozhipor

சென்னை : இன்று (ஜனவரி 25) தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்டுகிறது. தமிழகத்தில் இந்தி திணிப்பு கொண்டுவரப்பட்ட போது பலர் போராடி  உயிர்நீத்து தமிழ் மொழிக்காக போராடினர். இந்தி திணிப்பை எதிர்த்து ஜனவரி 15, 1939-ல் மொழிப்போர் தியாகி நடராசனும், மார்ச் 12, 1939-ல் மொழிப்போர் தியாகி தலைமுத்துவும் உயிர்த்தியாகம் செய்தனர்.

அதனை தொடர்ந்து அறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் 1967-ல் இந்தி எதிர்ப்பு மிக தீவிரமாக இருந்தது . அப்போது ஜனவரி 25 இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து எழுந்த பலகட்ட போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். தமிழுக்காக பலர் உயிர்த்தியாகம் செய்ததை நினைவுகூறும் வகையில் ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அதனை முன்னிட்டு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அமைக்கப்பட்டுளள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது நினைவிடங்களை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். மொழிப்போர் தியாகிகள் நிகழ்வில் கலந்து கொண்டு பேச உள்ளார்.

இந்நிலையில், மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், பதிவிடுகையில், ” உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம். தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம். உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழ் வாழ்க ” என பதிவிட்டுளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்