காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ”மகாத்மாவைக் கொண்டாடுவோம்” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு…!
காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ”மகாத்மாவைக் கொண்டாடுவோம்” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ”மகாத்மாவைக் கொண்டாடுவோம்” என்ற நிகழ்ச்சியை 01.10.2022 (சனிக்கிழமை) அன்று எழும்பூர் அருங்காட்சியம் தேசிய கலைக்கூடம் தரைத்தளத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகங்கள் துறை, காந்தி கொண்டாடுவோம்” உலக என்ற மையத்துடன் இணைந்து நிகழ்ச்சியை 01.10.2022 “மகாத்மாவைக் (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு எழும்பூர் அருங்காட்சியம் தேசிய கலைக்கூடம் தரைத்தளத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
காந்தியடிகள் கைப்பட எழுதிய கடிதம், டெலிகிராம், அவரது நினைவில் வெளியிடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் அரிய புகைப்படங்கள் அடங்கிய சிறப்புக் கண்காட்சி அருங்காட்சியக சிறப்பு கண்காட்சிக் கூடத்தில் (வளர்கலைக் கூடத்தில்) அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினையொட்டி 75 சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றிய விளக்கும் கண்காட்சியில் இடம் பெறுகிறது.
மேலும் தமிழகம் முழுவதும் இருந்து, 153 பள்ளி மாணவர்கள் மகாத்மா காந்தியடிகள் போல வேடமணிந்து, அவரது பொன்மொழிப் பதாகைகளை ஏந்தி பங்கேற்கின்றனர். தேச பக்தி பாடல்களைப் பாடியும், நடன நிகழ்ச்சி மூலமும் காந்தியடிகளின் சிறப்பினை போற்றுகின்றனர். இந்நிகழ்ச்சியில் அரசு உயர்அலுவலர்கள், பல்துறை முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.