ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

Chennai CMBT Bus stand

வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்பதாக சனி, ஞாயிறு அரசு விடுமுறை வருகிறது.

எனவே நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருப்பர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் கோவை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு இயக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 20ம் தேதி முதல் அக்டோபர் 25ம் தேதி வரை பயணிகள் அதிகமாக பயணிப்பார்கள் என்பதால்,  அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் தவறாமல் அவரவர் பணிக்கு வந்து பணி செய்ய வேண்டும் என்றும், கூடாது என்றும் தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்