கடைசி நாளான 17-ம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து -மாவட்ட ஆட்சியர் !

Default Image

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ம்  தேதி முதல் 31 தேதி வரை சயன  கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு  காட்சியளித்து வருகிறார்.

வருகின்ற 17-ம் தேதி வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அத்திவரதர் தரிசனம் வரும் 16-ம் தேதி இரவுடன் நிறைவுபெறும் எனவும் கடைசி நாளான 17-ம் தேதி தரிசனம் ரத்து  என  மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்து உள்ளார்.

அத்திவரதரை குளத்தில் வைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாலும் , ஆகம விதிப்படி சடங்குகள் செய்வதாலும் 17-ம் தேதி தரிசனம் ரத்து என  மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்து உள்ளார்.

கடந்த சில நாள்களாக அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வருகை தினமும்  3 லட்சமாக உள்ளது. ஒரே நாளில் அதிகப்பட்சமாக 3.70 லட்சம் பேர் தரிசனம் செய்து உள்ளனர். கடந்த 38 நாள்களாக 70.25 லட்சம் பக்தர்கள் தரிசனம்  செய்ததாக கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்