எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை!

Default Image

சென்னை:எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு, ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்.

அதிமுக கழக நிறுவன தலைவர் ‘பாரத ரத்னா’ இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 105-ஆவது பிறந்த நாள் ஜனவரி 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்றும்,இந்நாளில் எம்.ஜி.ஆர். மாளிகையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு,ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,இனிப்பு வழங்க உள்ளார்கள் என்றும்,இந்த நிகழ்ச்சியில்,அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஏற்கனவே அதிமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில்,சென்னை,ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, எம்.ஜி.ஆரின் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து,கொடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்த ஓபிஎஸ்,ஈபிஎஸ் இருவரும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்