நவம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு -தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

Default Image

நவம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குவது போன்ற திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்காக நவம்பர் மாதம் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“வருகின்ற 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்த அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி வரும் நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதனால்,வாக்காளர்கள் தங்களது பெயரை நீக்கம் அல்லது திருத்தம் செய்யவோ,மற்றும் இடமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள விண்ணப்பத்தை நவம்பர் 30-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். அவற்றின் மீது டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும்,இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

நவம்பர் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான படிவங்களை வழங்கலாம்.தொடர்புடைய வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், https://www.nvsp.in/ என்ற இணையதளம் மூலமாகவும், வாக்காளர் உதவி செயலி (VOTER HELP LINE- Mobile App) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.அதுமட்டுமல்லாமல்,வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களும் தங்கள் பெயர்களைச் சேர்க்கலாம்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்