மே 23ஆம் தேதிக்கு பின் பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளியிடுவேன்- தினகரன்
மே 23ஆம் தேதிக்கு பின் பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளியிடுவேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது. மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை இரண்டுகட்டமாக தினகரன் வெளியிட்டார்.
அதேபோல் பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது.
இந்நிலையில் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,மக்களவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ,மாநில கட்சிகள் தயவில்தான் மத்தியில் ஆட்சி அமையும் என்றும் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வீடுகள், கார்களில் ஏன் சோதனை நடத்துவதில்லை? கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல் மே 23ஆம் தேதிக்கு பின் பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளியிடுவேன் .ஜெ.வுக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று கூறிய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது அதிமுக என்று அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.