நெருங்கும் மழைக்கால கூட்டத்தொடர்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் அறிவிப்பு.!
வரும் ஜூலை 14ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி துவங்க உள்ளது. அன்று முதல் ஆகஸ்ட் 11 வரையில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அண்மையில் அறிவித்து இருந்தார். புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டாலும், இந்த மழைக்கால கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டத்திலேயே துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜூலை 14ஆம் தேதி திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில் மழைக்கால கூட்டத்தொடரில் என்னென்ன கேள்விகள் நாடாளுமன்றத்தில் எழுப்படப்பட் வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.