பட்டாசு ஆலை தீ விபத்து.! மேல்சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழப்பு.!
ஜனவரி 14ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 வடமாநிலத்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிவசங்குபட்டியில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தனியார் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வினோத் ராம்பால் , ராம்பாலாஜி, சந்தீப்குமார் ஆகிய வடமாநிலத்தவர்கள் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று இருந்தனர். இதில், , ராம்பாலாஜி, சந்தீப்குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர்.