தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை.! வெளியான அரசாணை.!
இன்று காலை அரசு சார்பில் அண்ணா சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்படும் என அரசாணை வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரரது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். அதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா என அனைவரும் கொண்டாடுவார்கள்.
அரசு மரியாதை : இந்நிலையில் அவர் தமிழக முதல்வராக பதவி வகித்து மக்கள் பணி பணியாற்றியதால் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். அதே போல இந்தாண்டும் அவருக்கு மரியாதை செலுத்த அரசாணை வெளியாகியுள்ளது.
அரசாணை : அதில் ஜெயலலிலதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு இன்று காலை 9.30 மணிக்கு அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் என தமிழக செய்தி தொடர்பு துறை சார்பில் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.