ஏப்ரல் 10 இல், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.!
ஓபிஎஸ் அணி தரப்பில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி, திருச்சியில் நடைபெறும் என ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது.
திருச்சியின் பிரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில், ஏப்ரல் 10 அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு அணி அறிக்கை வெளியிட்டுள்ளது.