அஞ்சலை அம்மாள் நினைவு நாள்: ‘பெண்கள் பாதுகாப்பை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்’ – தவெக தலைவர் விஜய்.!
"அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தில், பெண்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம்" என்று தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அக்கட்சியின் கொள்கை தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் சிலைகளை திறந்து வைத்தார்.
இந்த நிலையில், இன்று நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவருமான விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, தவெக தலைவர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் அலுவலகத்தில் அமைந்திருக்கும் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
வெற்றி தலைவன் வழியில் நித்தம் செல்வோம்
கொள்கை தலைவன் வழியில் யுத்தம் வெல்வோம்— தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) (@TVK_CbeNorth) February 20, 2025
இந்நிலையில், இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.… pic.twitter.com/0NBxY8BsqN
— TVK Vijay (@TVKVijayHQ) February 20, 2025
அஞ்சலை அம்மாள்
1890 ஆம் ஆண்டு கடலூரில் பிறந்த அஞ்சலையம்மாள் சுமார் 40 ஆண்டுகள் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டவர். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தின் போது 1921 ஆம் ஆண்டு தனது பொது வாழ்வைத் தொடங்கினார். சென்னையில் தடை செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டார். 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் நாள் தனது 71 வயதில் காலமானார்.