8-ம் தேதி முதல் கோவை உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு.!

Default Image

ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள் திறப்பதால் நேற்று ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஹோட்டல் மற்றும் உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள்  திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் ஹோட்டல் மற்றும் உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

  • உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
  • எல்லா உணவகங்களிலும் குளிர்சாதன வசதியை இயக்க கூடாது.
  • வாடிக்கையாளர்கள் சானிடேசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் உணவகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.
  • உணவகத்திற்கு உள் உள்ள இருக்கைகளில் இரண்டு நபர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிக்க வேண்டும்.
  • உணவகங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள பொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
  • மாநகராட்சியால் கொடுக்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் அந்த உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .
  • அணைத்து உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.
  • உணவு விநியோக ஊழியர்கள் உணவு பார்சலை நேரடியாக மக்களுக்கு கொடுக்காமல் அதற்கு பதிலாக வாடிக்கையாளரின் அறை வாசலில் வைக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்