நாளை ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் பகல், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு உள்ள நிலையில், இன்று இரவு 10 மணி முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
நாளை முழு ஊரடங்கில், பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவை இயங்காது. வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படும். செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை (ஞாயிறு) முழு ஊரடங்கு என்பதால் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் (ஜன.24) முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…