தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்!

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகள், நாளை முதல் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தமிழகத்திற்குள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அரசு விரைவு பேருந்துக்குள், மாநிலம் விட்டு மாநிலம் வரை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆம்னி பேருந்துகள் ஓடவில்லை.
மேலும், ஆம்னி பேருந்துகள் 174 நாட்களாக ஓடாத நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பேருந்துகளை இயக்க அனுமதிக்குமாறு அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தநிலையில், தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் எனவும், முதற்கட்டமாக 500 பேருந்துகளை இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025