சென்னை:ஒமைக்ரான் வைரஸ்,தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
தென் ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது. மருத்துவ நிபுணர்களால் பி.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸுக்கு, ஓமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி உள்ளது.எனவே தென் ஆப்ரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,உலகையே அச்சுறுத்தும் புதிய வகை, உருமாறிய ஒமைக்ரான் என்ற கொரோனா வைரஸ்,தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு தற்போது காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்டை நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தவும்,தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …