வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுடன் வந்த 3 பேருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு இல்லை என அமைச்சர்.மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஓமைக்ரான் எனும் வகையில் பரவி வருகிறது.
இந்த ஓமைக்ரேன் வகை வைரஸ் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதால், தமிழகத்திற்குள் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வெளிநாட்டிலிருந்து வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது எந்த வகை கொரோனா என்பது விரைவில் தெரியவரும் எனவும் மக்கள் நல்வாழ்வு துறை குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் நேற்று தெரிவித்திருந்தார். இன்று அவர்களுக்கான பரிசோதனை முடிவில் மூவருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…