தஞ்சை பெரிய கோயில் 23 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. 8ம் கால பூஜை காலை 4.30 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு மகா பூரணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தஞ்சை குடமுழக்கில் தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. ராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோபுரம் மற்றும் கோவிலை சுற்றி விண்ணை முட்டும் ஓம் நமசிவாய நாமம் ஒலித்தது. பின்னர் மூலவர் விமானத்தில் கலசநீர் ஊற்றப்பட்டது. இந்த நிகழவை காண தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர்.
இது வரலாற்றில் 6-வது முறையாக குடமுழுக்கு விழா நடக்கிறது. இந்த திருவிழாவில் வரலாற்று நிகழ்வை காண உலக தமிழர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, நம் நாட்டின் ஆன்மீக வரலாற்றின் அடையாளமாக மட்டுமல்லாமல், உலக மக்கள் கண்டு வியக்கும் சுற்றுலா தளமாகவும் தஞ்சை பெரிய கோவில் இருந்து வருகிறது. இந்த விழாவிற்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என குறிப்பிடப்படுகிறது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…