விண்ணை முட்டும் ஓம் நமசிவாய நாமம்.! பக்தர்களுக்கு அற்புத காட்சி.!

Default Image
  • தஞ்சை பெரிய கோயில் 23 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா நடைபெற்று வருகிறது.
  • ராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோபுரத்தின் உச்சியில் விண்ணை முட்டும் ஓம் நமசிவாய நாமம் ஒலித்தது.

தஞ்சை பெரிய கோயில் 23 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. 8ம் கால பூஜை காலை 4.30 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு மகா பூரணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தஞ்சை குடமுழக்கில் தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. ராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோபுரம் மற்றும் கோவிலை சுற்றி விண்ணை முட்டும் ஓம் நமசிவாய நாமம் ஒலித்தது. பின்னர் மூலவர் விமானத்தில் கலசநீர் ஊற்றப்பட்டது. இந்த நிகழவை காண தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர்.

இது வரலாற்றில் 6-வது முறையாக குடமுழுக்கு விழா நடக்கிறது. இந்த திருவிழாவில் வரலாற்று நிகழ்வை காண உலக தமிழர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, நம் நாட்டின் ஆன்மீக வரலாற்றின் அடையாளமாக மட்டுமல்லாமல், உலக மக்கள் கண்டு வியக்கும் சுற்றுலா தளமாகவும் தஞ்சை பெரிய கோவில் இருந்து வருகிறது. இந்த விழாவிற்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்