திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு. 

திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் ரூ.238 கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 635 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.79 கோடி மதிப்பில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும், பிரம்மாண்டமாக தான் நடக்கும். புதிய புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது; மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளியை சந்திக்க உள்ளேன்; மக்களுக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க கூடிய மகத்தான திட்டம்தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம்.

உதயநிதி அமைச்சரான போது விமர்சனம் எழுந்தது. விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதில் சொல்லி வருகிறார் அமைச்சர் உதயநிதி. உதயநிதி வகிக்கும் துறைகளை மேம்படுத்த வேண்டும் என முதல்வராக விரும்புகிறேன்.

உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வழங்கக் கூடிய வகையில் தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன. திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க திமுக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது; தமிழ்நாட்டில் 4,38,000 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளன; 50,24,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெண்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு அடைந்தது. பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லை. உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு உதவிதொகை  போன்ற திட்டங்களை தொடங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்