நான்கு மாவட்டத்தில் ஒலிம்பிக் அகாடமி..! நிதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு ..!

Published by
அகில் R

2024-ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து சில திட்டங்களை வெளியிட்டார். அதில் முக்கியமாக தமிழ் நாட்டிலிருந்து சாதனை வீரர்களை உருவாக்கி ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்வதே இந்த திட்டங்களின் குறிக்கோளாக பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல்: திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம் தொடக்கம்

தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஒலிம்பிக் அகாடமிகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும். அந்த அகாடமிகளில் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் திறனுடைய சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்கியதுடன் விளையாட்டுப்‌ போட்டிகளின்‌ தலைமையகமாகவும் தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்று அந்த திட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருக்கிறார்.

இங்கு நிறுவ போகும் நான்கு மாவட்ட அகாடமிகளில் இறகுப்பந்து (Badminton), கூடைப்பந்து (Basketball), கைப்பந்து (Volleyball) மற்றும் தடகளம்(Athletics) உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உலகத்தரம் மிக்க பயிற்சிகள் கொடுக்கப்படும். மேலும், நிறுவ போகும் நான்கு மாவட்ட அகாடமிகளும் விளையாட்டு அறிவியலுக்கான மையங்களாகவும் செயல்படும்.

தமிழ்நாட்டு இளைஞர்களின்‌ ஆற்றலையும்‌ அறிவுத்திறனையும்‌ ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி, சிறந்த சாதனையாளர்களாக உருவாக்க முதலமைச்சரின்‌ இளைஞர்‌ விளையாட்டுத் திருவிழாக்கள்‌ தமிழ்நாடெங்கும்‌ நடத்தப்படும்‌ எனவும் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது திட்டத்தில் கூறியிருந்தார். இந்த  திட்டங்கள் எல்லாம் வேகமாக  செயல்படுத்த வேண்டும் என்பதே தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

6 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

6 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

6 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

6 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

6 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

6 hours ago