நான்கு மாவட்டத்தில் ஒலிம்பிக் அகாடமி..! நிதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு ..!
2024-ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து சில திட்டங்களை வெளியிட்டார். அதில் முக்கியமாக தமிழ் நாட்டிலிருந்து சாதனை வீரர்களை உருவாக்கி ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்வதே இந்த திட்டங்களின் குறிக்கோளாக பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல்: திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம் தொடக்கம்
தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஒலிம்பிக் அகாடமிகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும். அந்த அகாடமிகளில் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் திறனுடைய சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்கியதுடன் விளையாட்டுப் போட்டிகளின் தலைமையகமாகவும் தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்று அந்த திட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருக்கிறார்.
இங்கு நிறுவ போகும் நான்கு மாவட்ட அகாடமிகளில் இறகுப்பந்து (Badminton), கூடைப்பந்து (Basketball), கைப்பந்து (Volleyball) மற்றும் தடகளம்(Athletics) உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உலகத்தரம் மிக்க பயிற்சிகள் கொடுக்கப்படும். மேலும், நிறுவ போகும் நான்கு மாவட்ட அகாடமிகளும் விளையாட்டு அறிவியலுக்கான மையங்களாகவும் செயல்படும்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆற்றலையும் அறிவுத்திறனையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி, சிறந்த சாதனையாளர்களாக உருவாக்க முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டுத் திருவிழாக்கள் தமிழ்நாடெங்கும் நடத்தப்படும் எனவும் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது திட்டத்தில் கூறியிருந்தார். இந்த திட்டங்கள் எல்லாம் வேகமாக செயல்படுத்த வேண்டும் என்பதே தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.