மதுரையில் தொடரும் மூதாட்டிகள் கொலை…அச்சத்தில் மக்கள்! போலீசார் தீவிர விசாரணை!

murder

மதுரை : தொடர்ச்சியாக மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கடந்த ஒரு வாரத்தில் 3 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட நிலையில்,   இன்று மேலும் ஒரு மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர்  70 வயதான மூதாட்டி முத்துலெட்சுமி. இவர் சடலமாக தன்னுடைய வீட்டில் மீட்கப்பட்டுள்ளார். மூதாட்டி முத்துலெட்சுமி அணிந்திருந்த கம்மலை காணாததால், நகைக்காக கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை  நடத்தி வருகிறார்கள்.

இதற்கு முன்னதாக கடந்த ஜூலை 8-ஆம் தேதி திருமங்கலம் அருகே பெரிய வாகைகுளம் மாயேன் நகரை சேர்ந்த காசம்மாள் (70) மூதாட்டியை மர்ம நபர்கள்கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, 65 பவுன் நகைகளை கொள்ளையடித்து  சென்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று ஜூலை 12 மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 70 வயதான மூதாட்டி முத்துலெட்சுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூதாட்டிகள் தொடர் கொலை சம்பவம் மதுரையில் நடைபெற்று வருவதால், நகைக்காக கொலை சம்பவங்களா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Nainar Nagendran - Mk Stalin
adam zampa ipl
weather update rain to heat
good bad ugly ajith ilayaraja
Madurai MP Su Venkatesan
Harris Jayaraj